மது பாட்டிலோடு விஷால்…

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்த சண்டக்கோழி 2 படம் அண்மையில் வெளியானது. அப்படத்துக்குப் பிறகு தற்போது விஷால் நடித்துவரும் படம் அயோக்யா. ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவியாளராகப் பணியாற்றிய வெங்கட் மோகன், இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்தில் விஷால் ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.

தெலுங்கில் வெளியான டெம்பர் தெலுங்குப் படத்தின் ரீமேக் இது. கடந்த ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி அயோக்யா படத்தின் படப்பிடிப்பு, தொடங்கியது. இந்தப் படத்தில் போலீஸாக நடிக்கிறார் விஷால். இதன் பர்ஸ்ட் லுக் நேற்று நவம்பர் 19 வெளியிடப்பட்டது. அதில், கையில் பீர் பாட்டிலுடன் போலீஸ் ஜீப் மீது விஷால் அமர்ந்திருப்பது போல் இடம்பெற்றிருக்கிறது.

சர்கார் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் விஜய் சிகரெட் பிடிப்பதுபோல் படம் இடம் பெற்றதற்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. தொலைக்காட்சி ஊடகங்களில் விவாதங்கள் நடந்தன. இப்போது அயோக்யாவில் பீர் பாட்டில் உடன் விஷால் இருக்கிறார். இதற்கு எந்தமாதிரியான விளைவு ஏற்படும் என தெரியவில்லை.

ஜனவரி மாதம் இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் மற்றும் விஷால் பிலிம் பேக்டரி இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. விக்ரம் வேதா சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.

Sharing is caring!