மது போதையில் கார் ஓட்டி சிக்கிக் கொண்ட பாரதிராஜா மகன்

 

சென்னை:
நடிகர்கள் மது போதையில் கார் ஓட்டி போலீசாரிடம் பிடிபடுவது தொடர்கதையாகி வருகிறது. அப்போ நடிகர் ஜெய் கோர்ட் வரை சென்று அபராதம் செலுத்தினார். இப்போ மது போதையில் கார் ஓட்டிய பாரதிராஜா மகன் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ். தன் தந்தையின் தாஜ்மகால் படத்தில் இவர் அறிமுகமானார். ஆனால் இவரது நடிப்பு எடுபடவில்லை. சில படங்களில் மட்டுமே நடித்த இவர் அதற்கு பிறகு எந்த படத்திலும் தலைகாட்டவில்லை. தற்போது ஒரு படத்தில் விலலனாக நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இவர் ஸ்டெர்லிங் ரோட்டில் விலை உயர்ந்த பி.எம்.டபுள்யூ காரை ஓட்டி சென்றுள்ளார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் மனோஜ்குமாரிடம் விசாரணை நடத்தினர்.

இதில் அவர் மது அருந்தியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்துதொடர்ந்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது காரை பறிமுதல் செய்தனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!