மனநலம் பாதிக்கப்பட்ட முன்னணி நடிகரின் அக்கா?

பாலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவர் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன். அவரது அக்கா சுனைனா ரோஷன் மனநலம் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்தி வெளியானது.

ஆனால் அதை அவர் மறுத்துள்ளார். “நான் சென்றவருடம் லண்டனில் ஒரு மருத்துவமனையில் போதை பழக்கத்தில் இருந்து மீள்வதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டேன். தற்போது நான் எந்த சிகிச்சையும் எடுத்துக்கொள்ளவில்லை.”

“நான் ஞாயிற்றுக்கிழமை இரவு பார்ட்டிக்கு சென்றுவிட்டு அப்பா வீட்டுக்கு சென்றுவிட்டேன். ஆனால் நான் சிகிச்சை பெறுவதாக ஒரு முன்னணி பத்திரிகை தவறாக செய்தி வெளியிட்டுள்ளது. எனக்கு மனநலம் பாதிக்கப்படவில்லை. அதிகம் கோபப்படும் நபரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறிவிடுவீர்களா? என அவர் கேட்டுள்ளார்.

மேலும் தான் உடல் எடையை குறைக்க மட்டும் டயட் கட்ரோலில் இருப்பதாகவும், தனக்கு வேறு பிரச்சனை எதுவும் இல்லை என கூறியுள்ளார்.

Sharing is caring!