மன்மர்ஸியான் டிரைலர் வெளியீடு

அனுராக் கஷ்யப் இயக்கத்தில் பாலிவுடில் உருவாகியுள்ள திரைப்படம் மன்மர்ஸியான். அபிஷேக் பச்சன் டாப்சீ விக்கி கவ்ஷல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஒளிபதிவாளர் சில்வேஸ்தர். டொராண்டோ பட விழாவில் வெளியிடவுள்ள இந்த திரைபடத்தை தயாரித்துள்ளது ஃபேண்டம் ஃபிலிம் நிறுவனம்.

சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது.

இந்நிலையில் அமிட் ட்ரிவெடி இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார். ஈரோஸ் இன்டர்நேஷனல் இந்த படத்தை ரிலீஸ் செய்வதாக தகவல்கள் வெளியாகிவுள்ளது.

நெட்ஃபிளிக்ஸில் வெளியான ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ தொடரை தொடர்ந்து அனுராக் இயக்கும் திரைப்படம் மன்மர்ஸியான். மேலும் நயன்தாரா நடித்து வரும் இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் அனுராக் வில்லனாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அபிஷேக் பச்சன் நடிப்பில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் செப்டம்பர் 24ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

Sharing is caring!