மன திருப்தியாக இவ்வருடம் முடிகிறது… நடிகர் சித்தார்த் டுவிட்

சென்னை:
மன திருப்தியாக இவ்வருடம் முடிகிறது, அடுத்த வருடம் முழுவதும் பட ரிலீஸ் இருக்கிறது என்று நடிகர் சித்தார்த் டுவிட் போட்டுள்ளார்.

பாய்ஸ் படத்தில் அறிமுகமாகி பின்னர் சில படங்கள் வரை சாக்லெட் பாயாக வலம் வந்த நடிகர் சித்தார்த் பின்னர் அதிரடியாக நல்ல கதைகளாக தேடி பிடித்து நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையல் இவர் ஒரு டுவிட் செய்துள்ளார் அதில், மன திருப்தியாக இவ்வருடம் முடிகிறது, அடுத்த வருடம் முழுவதும் பட ரிலீஸ் இருக்கிறது. கடந்த இரண்டு மாதமாக தோள்பட்டை அறுவை சிகிச்சை, படப்பிடிப்புகள், வைரஸ் தொற்று இதையெல்லாம் பார்த்துவிட்டேன். 2018 போதும், அடுத்த வருடம் பார்ப்போம் என டுவிட் செய்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!