மம்முட்டிக்கு தந்தையாக நடிக்கும் ஜெகபதிபாபு

தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் ரசிகர்களால் அறியப்படும் வில்லனாக மாறிவிட்டார் நடிகர் ஜெகபதிபாபு. அந்த வகையில் மலையாளத்தில் மோகன்லாலுடன் புலிமுருகன் படத்திலும், அவரது மகன் பிரணவ் நடித்த ஆதி படத்திலும் வில்லனாக நடித்திருந்தார் ஜெகபதி பாபு.

இந்த நிலையில் மம்முட்டியுடன் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் ஜெகபதிபாபு. ஆனால் இது மலையாளத்தில் அல்ல, தெலுங்கில் ஆம். மம்முட்டி தெலுங்கில் மறைந்த முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் கதாபாத்திரத்தில் நடிக்கும் யாத்ரா படத்தில் தான் மம்முட்டியுடன் கூட்டணி சேர்கிறார் ஜெகபதி பாபு.

இதில் பியூட்டி என்னவென்றால் 56 வயதான ஜெகபதிபாபு, இந்த படத்தில் 66 வயதான மம்முட்டியின் தந்தையாக, அதாவது ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் தந்தை ஒய்எஸ்.ராஜா ரெட்டியாக நடிக்கிறார் ஜெகபதி பாபு. இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் மஹி ராகவ் என்பவர் இயக்குகிறார்.

Sharing is caring!