மம்முட்டியின் யாத்ரா படத்திற்கு தடை கோரி வழக்கு

சென்னை:
மம்முட்டி நடித்துள்ள யாத்ரா படத்தை வெளியிடக்கூடாது என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக, முதல்வராக பதவி வகித்தவர், ஒய்.எஸ்.ஆர்., என்ற ராஜசேகர ரெட்டி. முதல்வராக இருந்த போது, ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, ‘யாத்ரா’ என்ற, திரைப்படம் உருவாகி உள்ளது.

ராஜசேகர் ரெட்டியாக, நடிகர் மம்முட்டி நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில், வரும் 8 ம் தேதி படம் வெளியாக உள்ளது. ‘யாத்ரா’ என்ற தலைப்பை, தயாரிப்பாளர்கள் சங்கத்தில், 2015ல் பதிவு செய்திருப்பதால் அதே பெயரில் படத்தை வெளியிடக் கூடாது என, உயர் நீதிமன்றத்தில், ‘ஸ்ரீசாய்லட்சுமி பிக்சர்ஸ்’ நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது.

மனு, நீதிபதி, எம்.சுந்தர் முன், விசாரணைக்கு வந்தது. உரிய பதில் அளிக்கும்படி, படத்தை தயாரித்துள்ள, ’70 எம்.எம்., இன்டர்நேஷனல் பிக்சர்ஸ்’ நிறுவனத்துக்கு, நீதிபதி உத்தரவிட்டார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!