மம்முட்டி படத்தின் டிக்கெட்டை ரூ.4.37 லட்சத்திற்கு ஏலம் எடுத்த ரசிகர்

அமெரிக்கா:
மம்முட்டி நடித்துள்ள யாத்ரா படத்தின் டிக்கெட்டை ரூ.4.37 லட்சம் ஏலத்தில் எடுத்துள்ளார் ரசிகர் ஒருவர்.

தமிழ்நாட்டில் விஜய்-அஜித் படங்கள் என்றால் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.

ஆனால் அமெரிகாவில் இருக்கும் ஆந்திராவை சேர்ந்த ரசிகர் ஒருவர் மம்முட்டி நடித்துள்ள யாத்ரா படத்தின் முதல் காட்சி டிக்கெட்டை $6,116 (ரூ.4.37 லட்சம்) கொடுத்து ஏலம் எடுத்துள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாற்று படம் தான் யாத்ரா. அவரை தீவிரமாக பின்பற்றும் முனீஸ்வர் ரெட்டி என்பவர் தான் இவ்வளவு செலவு செய்து டிக்கெட் வாங்கியுள்ளார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!