மறுப்பு… இந்தியன்2வில் நடிக்க அஜய்தேவ்கன் மறுப்பு

சென்னை:
இந்தியன் 2 படத்தில் அஜய்தேவ்கன் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இயக்குனர் ஷங்கர் தொடர்ந்து மிக பிரமாண்ட பட்ஜெட்டில் படம் இயக்கி பாலிவுட் சினிமா துறையினரையே மிரட்டிவருகிறார். மேலும் தற்போது அவர் இயக்கி வரும் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் என பல நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் வில்லனாக நடிக்க பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கூறப்பட்டது.
ஆனால் அவர் ஷங்கர் கொடுத்த வாய்ப்பை நிராகரித்துள்ளார். அதற்காக அவர் பலர் பல்வேறு காரணங்களை தெரிவித்துள்ளார்.

அடுத்து ராஜமௌலி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது தான் ஷங்கர் படத்தினை நிராகரிக்க முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

Sharing is caring!