மலேசியாவில் ஆல் டைம் நம்பர் 1 முதல்நாள் வசூல் சாதனை செய்த 2.0 படம்

சென்னை:
மலேசியாவில் ஆல் டைம் நம்பர் 1 முதல்நாள் வசூலை பெற்று சாதித்துள்ளது 2.0 படம்.

ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உலகம் முழுவதும்  வெளிவந்த படம் 2.0. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் 2.0 மலேசியாவில் ஆல் டைம் நம்பர் 1 முதல் நாள் வசூலை பெற்றுள்ளது, இதை இப்படத்தை வெளியிட்ட நிறுவனமே அறிவித்துள்ளது.

இப்படம் முதல் நாள் மலேசியாவில் இந்திய மதிப்பில் ரூ 4.5 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ரஜினி புதிய சாதனையை அங்கு படைத்துள்ளார், எப்படியும் இந்த வாரம் முடிவதற்குள் இப்படம் ரூ.15 கோடி வசூலை அங்கு எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!