மலையாளத்திலும் நடிகர் விஜய் சேதுபதி

மலையாளத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதன்முதலாக அறிமுகமாக இருக்கும் படத்திற்கு ‘மார்க்கோனி மத்தாய்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இரண்டு முக்கிய கேரக்டர்களில் விஜய் சேதுபதியும், நடிகர் ஜெயராமும் முதன்முறையாக இணைந்து நடிக்கின்றனர். சனில் கலத்தில் என்பவர்தான் இந்தப் படத்தை இயக்குகிறார்.

கதாநாயகியாக அங்கமாலி டைரீஸ் புகழ் அன்னா ரேஷ்மா ராஜன் நடிக்கிறார். இந்தப்படத்தில் ரேடியோவும் ஒரு முக்கிய கதாபாத்திரமாக இடம்பெறுகிறதாம். தமிழ் மலையாளம் என இருமொழி படமாக இது உருவாகிறது. அதற்கேற்றவாறு சென்னை, கோவா, எர்ணாகுளம் ஆகிய பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறதம், ஜனவரியில் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

Sharing is caring!