மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை – மலையாள பெண் சினிமா கலைஞர்கள்

பிரபல மலையாள முன்னணி நடிகை கடத்தப்பட்ட சம்பவத்திற்கு பிறகு மலையாள நடிகைகள் இணைந்து மலையாள பெண் சினிமா கலைஞர்கள் என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். இந்த அமைப்பின் சார்பில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது நடிகைகள் பத்மப்ரியா, ரேவதி, பார்வதி, ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன் ஆகியோர் கூட்டாக பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:

பிரபல நடிகை கடத்தப்பட்ட சம்பவத்தில் முன்னணி நடிகர் திலீப் குற்றவாளியாக நிற்கிறார். ஆனால் அவரை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்து விட்டு அவருக்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அவரை வைத்து முன்னணி தயாரிப்பாளர்கள் சவால்விட்டு படம் தயாரிக்கிறார்கள். கடத்தப்பட்ட நடிகைக்கு ஆதரவாக நடிகர் சங்கம் இதுவரை எதுவுமே செய்யவில்லை.

மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. இப்போதும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை நடந்து கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் 17 வயது இளம் நடிகை ஒருவர் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார். நாங்கள் பொறுமை இழந்து விட்டோம். மலையாள சினிமாவுக்கு பெண்கள் வரத் தயங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையை மாற்ற நாங்கள் தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Sharing is caring!