மலையாள திரையுலகின் பிரபல இயக்குனர் தம்பி கண்ணன்தானம் காலமானார்

மலையாள திரையுலகின் பிரபல இயக்குனர் தம்பி கண்ணன்தானம் காலமானார். இவருக்கு வயது 65. உடல்நல குறைவு காரணமாக கடந்த சில நாட்களாகவே வெண்டிலேட்டர் உதவியால் நாட்களை நகர்த்தி வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்துள்ளது. மலையாள திரையுலகில் எண்பதுகளில் பிரபலமாக விளங்கிய இவர், சுமார் 16 படங்களை இயக்கியுள்ளார். 5 படங்களை தயாரித்தும் உள்ளார்.

குறிப்பாக மோகன்லால் ஹீரோவாக அறிமுகமான காலகட்டத்தில் அவரை வைத்து ‘ராஜாவிண்டே மகன்’ என்கிற படத்தை தயாரித்து, இயக்கினார். இந்தப்படம் தான் மோகன்லாலுக்கு கமர்ஷியல் ஹீரோ அந்தஸ்தை உருவாக்கி கொடுத்தது. அதைத்தொடர்ந்து மோகன்லாலுடன் ஆறு படங்களில் இணைந்து பணியாற்றினார் தம்பி கண்ணன்தானம். மேலும் நடிகர் சுரேஷ்கோபிக்கும் அதிரடியான ஹிட்டுக்களை இவர் கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!