மலையாள நடிகையாகவே தான் பார்க்கப்பட்டு வருகிறார்

கர்நாடகாவை சேர்ந்தவராக இருந்தாலும் நடிகை நிக்கி கல்ராணி அறிமுகமானது ‘1983’ என்கிற மலையாளப்படத்தில் தான் என்பதால், அவர் இப்போதுவரை மலையாள நடிகையாகவே தான் பார்க்கப்பட்டு வருகிறார். அதன்பின் அங்கொன்றும் இங்கொன்றுமாக மலையாளத்தில் நடித்து வந்த நிக்கி கல்ராணி, தனது முழு கவனத்தையும் தமிழ் திரையுலகில் தான் செலுத்தி வந்தார்.

இந்தநிலையில் இரண்டு வருட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த 2014ல் மலையாளத்தில் வெளியான ‘இதிகாசா’ படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது.. இந்தப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தான் நிக்கி கல்ராணி நடிக்க உள்ளார்.. இந்த இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக நடிகர் இந்திரஜித் நடிக்கிறார்.

Sharing is caring!