மல்யுத்த வீராங்கனையாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்

சென்னை:
மல்யுத்த வீராங்கனையாக நடிக்க உள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

கனா படத்தை தொடர்ந்து அடுத்த படத்திற்காக ஐஸ்வர்யா ராஜேஷ் புதிய முயற்சி ஒன்றை எடுத்து வருகிறார். கனா படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராஜேசை நோக்கி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்கள் தேடி வருகின்றன. விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கும் படத்தில் முதலில் ஐஸ்வர்யாவை நடிக்க வைத்தார்கள்.

அடுத்து தெலுங்கில் இன்னொரு கதையையும் ஓகே செய்து முடித்திருக்கிறார். கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்தது போல, இந்தப் படத்தில் மல்யுத்த வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனது கிராமத்தினரின் கனவை நனவாக்க மல்யுத்த வீராங்கனையாக களமிறங்கும் கேரக்டரில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இதற்காக மல்யுத்த பயிற்சி எடுத்து வருகிறார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி

Sharing is caring!