மஹத் செயல்… முகம் சுளித்த போட்டியாளர்கள்

சென்னை:
மும்தாஜை கிண்டல் செய்ய மஹத் செய்த செயல் மற்ற போட்டியாளர்களை முகம் சுளிக்க செய்துள்ளது.

தற்போது பிக்பாஸ் வீட்டில் தற்போது போட்டியாளர்களுக்கு இன்னொரு போட்டியாளரின் கேரக்டர் போல இருக்கவேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

அதில் நடிகர் மஹத் மும்தாஜ் போல நடந்துகொள்ளவேண்டும் என கூறப்பட்டது. இந்நிலையில் இந்த டாஸ்கில் மும்தாஜை அசிங்கப்படுத்த பல்வேறு விஷயங்களை செய்துவருகிறார் மஹத்.
மும்தாஜை போலவே உடை அணிந்திருந்த மஹத், அவரை அசிங்கப்படுத்தும் விதத்தில் அனைவர் முன்பும் உடையை கழற்றுவது போல நடித்தார்.

இதை பார்த்து மற்ற போட்டியாளர்கள் முகம் சுளித்தனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!