மஹத் மீண்டும் காதலியுடன் இணைந்தார்

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து மஹத் வெளியேறினார். மற்றவர்களை விட அதிக சர்ச்சைக்குள்ளாகியவராக இருந்த மஹத்தின் எலிமினேஷன் பலருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. கோபம், சண்டை என அளவுக்கு அதிகமாக இருந்தாலும், வெளியில் தனது காதலி காத்துக் கொண்டிருக்க, உள்ளே யாஷிகாவுடனும் காதலில் விழுந்தது, பலருக்கு அதிர்ச்சியை வரவழைத்தது.

கூடவே, தனக்கு இனி மஹத் வேண்டாம் என அவரது காதலி பிராச்சியும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதனால் அவரின் எதிர்காலம் என்னாகும், பிராச்சி மன்னித்து ஏற்றுக் கொள்வாரா அல்லது நிரந்தரமாக பிரிந்துவிடுவார்களா? என பல கேள்விகள் பார்வையாளர்களிடம் இருந்தது.

இந்நிலையில் தனது காதலி பிராச்சியுடன் இருக்கும்படி ஒரு படத்தைத் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கும் மஹத், ‘லவ் ஆஃப் மை லைஃப், இவள் தான் என் உலகம்’ என்ற கேப்ஷனுடன் ஹாட்டின் ஸ்மைலி போட்டு முடித்திருக்கிறார். ஆக, பெரிய மனதோடு மஹத்தை மன்னித்து ஏற்றுக் கொண்டிருக்கிறார் பிராச்சி என்கிறார்கள் இருவருக்கும் நெருக்கமானவர்கள்!

Sharing is caring!