மஹத்- யாஷிகா இடையில் என்ன இருக்குது….?

தொடக்கத்தில் இருந்தே நெருக்கமாக பழகி வரும் யாஷிகாவும் மகத்தும் வெறும் நண்பர்கள் மட்டும் தானா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாராவாரம் ஒரு படக்குழுவினர் வந்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த வாரம் ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் ஹீரோ  ஹரிஷ் கல்யாண்  பிக்பாஸ் வீட்டிற்கு செல்கிறார். பிக்பாஸ் வீடு அவருக்கு புதிதல்ல. சென்ற சீசனில் அவர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்து கடைசி வரை இருந்தவர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கென ரசிகர்களும் உருவாகி உள்ளனர். இன்று பியார் பிரேமா காதல் படம் வெளியாக உள்ள நிலையில் அவர் பிரோமோஷனுக்காக மீண்டும் அந்த வீட்டிற்குள் சென்றுள்ளார்.

வீட்டிற்குள் வருபவர்களை வைத்து பிரச்னைகளை உருவாக்குவதில் கில்லாடியான பிக்பாஸ், முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் வந்திருக்கும் போது சும்மா விடுவாரா? அவரை வைத்து ஓரு டாஸ்க் நடத்துகிறார். அதில், மகத்திடம் “யாஷிகாவுக்கு உங்களுக்கும் இடையே இருக்கும் உறவு நட்பையும் தாண்டி புனிதமானதா? ” என்று ஹரிஷ் கேட்கிறார். அதற்கு மகத் மட்டும் இல்லை என பதில் அளிக்க, மற்றவர்கள் அனைவரும் ஆம் என்கிறார்கள். பிறகு மகத்தின் பதிலை நினைத்து யாஷிகா அழுது கொண்டு இருக்கிறார். அவருக்கு மும்தாஜ் ஆறுதல் கூறுவது போன்று காட்டப்படுகிறது.

Sharing is caring!