மஹா படக்குழுவிற்கு இப்படியொரு உதவி செய்தாரா சிம்பு?

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் மாநாடு. அரசியல் கலந்த படமாக உருவாகும் இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை லிசியின் மகளான கல்யாணி பிரியதர்சன் நடிக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கவிருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 25-ஆம் தேதி மலேசியாவில் துவங்க இருக்கிறது. இதற்கிடையில் தற்சமயம் நடித்து வருகின்ற ஹன்சிகாவின் மஹா படத்தை முடித்து கொள்ளவிருந்தார், சிம்பு.

ஆனால் மகா படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் கோவாவில் நடைபெற்றபோது அங்குள்ள ஏர்போர்ட்டில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகள் படமாக்க முடியவில்லை. அந்த காட்சிகளை மாநாடு படப்பிடிப்புக்காக மலேஷியா செல்லும்போது அங்கே எடுத்துக் கொள்ளலாம் என்று சிம்பு கூறி இருக்கிறாராம்.

அது மட்டுமல்லாமல் இப்படத்தில் 8 நாட்கள் மட்டுமே நடிக்க கால்ஷீட் கொடுத்த சிம்பு இப்போது கூடுதலாக 4 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.

Sharing is caring!