மஹா படத்தின் மூலம் இணைந்துள்ளோம்… டுவிட் போட்ட ஹன்சிகா

சென்னை:
கைக் கோர்த்தது போல் ஒரு புகைப்படம் போட்டு மஹா படத்தின் மூலம் இணைந்துள்ளோம் என பதிவு செய்துள்ளார் நடிகை ஹன்சிகா.

சிம்பு வாழ்க்கையில் எத்தனை காதல் இருந்தது என்று எல்லோருக்கும் தெரியும். கடைசியாக அவர் நடிகை ஹன்சிகாவை காதலித்தார் பின் சில பிரச்சனைகளால் இருவரும் பிரிந்தனர்.

அந்த தகவலை அவர்கள் இருவருமே வெளிப்படையாக கூறியிருந்தனர். இந்த நிலையில் ஹன்சிகாவின் மஹா என்ற படத்தில் சிம்பு சிறப்பு வேடத்தில் நடிக்கிறார் என்றனர். வந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் ஹன்சிகா தன்னுடைய டுவிட்டரில் சிம்புவுடன் கைக் கோர்த்தது போல் ஒரு புகைப்படம் போட்டு மஹா படத்தின் மூலம் இணைந்துள்ளோம் என பதிவு செய்துள்ளார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!