மஹிதான் என் உலகம்

தமிழ் சினிமா உலகில் சினிமா மற்றும் சின்னத்திரையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனி அடையாளத்துடன் ஜொலிப்பவர் தான் நடிகை ரேவதி.

“வாழ்க்கையில பல சோதனைகளைச் சந்திச்சு மீண்டு வந்திருக்கேன். ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மை என்பது அர்த்தமான ஒன்று. அதற்காக நான் ஏங்கிய, கலங்கிய தருணங்களை வார்த்தைகளில் விபரித்துவிட முடியாது.

எனது கணவருடமிருந்து விவாகரத்துப் பெற்றதன் பின்னர் தாய்மை பற்றி யோசித்த நான், டெஸ்ட்டியூப் (TestTube) முறையில் கர்ப்பம் தரித்தேன். அதன்மூலம் எனக்குக் கிடைத்தவள் தான் என் மகள் மஹி.

அவள், என்னையும் வெளியுலகையும் பார்த்த நொடியை என் வாழ்நாளில் மறக்கமுடியாது. இப்போது மஹிக்கு ஐந்து வயதாகிறது எனக் கூறிய ரேவதி, மஹி, தத்தெடுக்கப்பட்ட குழந்தை என வதந்திகள் உலாவுவது பற்றி எனக்குக் கவலையில்லை. மஹிதான் என் உலகம். அவள்தான் என் வாழ்நாள் அடையாளம் என்றார் காதலும் தாய்மையும் கலந்தவராக.

Sharing is caring!