மாஜி மனைவியை வாழ்த்திய பவன் கல்யாணம்; மிரட்டிய ரசிகர்கள்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் பவன் கல்யாணும் ஒருவர். சிரஞ்சீவியின் தம்பியான இவர், தற்போது அரசியல் கட்சியும் தொடங்கியிருக்கிறார். பவன் கல்யாணின் முன்னாள் மனைவி நடிகை ரேணு தேசாய். இவர்களுக்கு அகிரா, ஆத்யா என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளன. கடந்த 2012ம் ஆண்டு, கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர்.

அதன்பிறகு பவன் கல்யாண் மறுமணம் செய்து கொண்டார். ரேணு தேசாயும் தற்போது மறுமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். அவருக்கு ஒருவருடன் நிச்சயதார்த்தமும் நடைபெற்றுள்ளது.

இந்த போட்டோக்கள் வெளியானதையடுத்து, ரேணுதேசாய் மறுமணம் செய்வதற்கு பவன்கல்யாண் ரசிகர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். சமூக வலைதளங்களில் அவரை மிரட்டும் வகையில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

அதேசமயம், பவன் கல்யாணோ, ரேணு தேசாயின் மறுமணத்திற்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். “வாழ்க்கையின் புதிய கட்டத்துக்கு நுழையும் ரேணுவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஆரோக்கியம், அமைதி மற்றும் செழிப்புடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்” என டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

Sharing is caring!