மாதவன் நடிக்கும் படத்தில் அனுஷ்கா

2006ல் மாதவன் நடித்த ரெண்டு படத்தில் தமிழுக்கு வந்தவர் அனுஷ்கா. அதன்பிறகு வேகமாக வளர்ந்த அவர், பாகமதி படத்திற்கு பிறகு உடல் பருமன் காரணமாக எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருந்து வந்தார். அதோடு, உடல் எடையை குறைப்பதில் தீவிரம் காட்டி வந்தார். இந்த இடைவெளி காரணமாக, அனுஷ்கா திருமணத்திற்கு தயாராகிக் கொண்டிருப்பதாக செய்திகள் பரவின.

இந்த நிலையில், தற்போது மாதவன் நடிக்கும் படத்தில் அனுஷ்கா நடிப்பதாக இப்படத்தை தயாரிக்கும் கோனா வெங்கட் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த படத்தை ஹேமந்த் மதுகர் என்பவர் இயக்குகிறார். அடுத்தாண்டு படப்பிடிப்பு தொடங்குகிறது. 12 ஆண்டுகளுக்கு பிறகு மாதவன் – அனுஷ்கா மீண்டும் இணைகிறார்கள்.

இப்படத்திற்கு சைலன்ஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அது உறுதி செய்யப்படவில்லை. தமிழ், தெலுங்கில் இப்படம் தயாராகும் என தெரிகிறது. அனுஷ்காவின் பிறந்த நாளான நேற்று அவரின் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருப்பது ரசிகர்களை குஷியாக்கி உள்ளது.

Sharing is caring!