மாநாடு படத்தின் கதை மாஸ்… மாஸ் கதை… எடிட்டரின் டுவிட்

சென்னை:
மாஸ் கதை சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் கதை மாஸ் என்று எடிட்டர் பிரவீன் டுவிட் போட்டுள்ளார்.

சிம்பு அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். செக்கச்சிவந்த வானம் படத்தை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கும் வந்தா ராஜாவா தான் வருவேன் படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது தள்ளி போய் உள்ளது. இதற்கு அடுத்து சிம்பு-வெங்கட் பிரபு மாநாடு என்ற படம் மூலம் கூட்டணி அமைக்கிறார்கள்.

படத்தின் படப்பிடிப்போ பிப்ரவரி 3ம் தேதி இருந்து தொடங்குகிறது. வெங்கட் பிரபுவிடம் மாநாடு பட கதையை கேட்ட எடிட்டர் பிரவீன் தன்னுடைய டுவிட்டரில் கதை மாஸாக இருக்கிறது என பதிவு செய்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!