மானசீக குரு ஹிருத்திக் ரோஷன்

பாலிவுட் முன்னாள் நடிகரும், அரசியல்வாதியுமான, சத்ருகன் சின்ஹாவின் மகள் தான், பிரபல நடிகை சோனக் ஷி சின்கா. பொதுவாக, திரைப்படங்களில் நடிக்க வரும் வாரிசுகள், தங்கள் தந்தை அல்லது தாயைத் தான், குரு என்பர். இந்த விஷயத்தில், சோனாக் ஷி, கொஞ்சம் வித்தியாசமானவராக உள்ளார்.

‘உங்கள் மானசீக குரு யார்?’ என, கேட்டால், பிரபல நடிகர் ஹிருத்திக் ரோஷனை கை காட்டுகிறார். ‘அவரது ஆலோசனை மட்டும், சரியான நேரத்தில் எனக்கு கிடைக்காமல் இருந்திருந்தால், இப்படி கட்டுக்கோப்பான தோற்றத்துடன், என்னை பார்க்கும் வாய்ப்பு, ரசிகர்களுக்கு கிடைத்திருக்காது’ என்கிறார், சோனக் ஷி.சமீபகாலமாக, கடுமையாக உடற்பயிற்சி செய்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார், அவர்.

ஹிருத்திக் ரோஷனும், உடற்பயிற்சி மீது, மிகுந்த ஆர்வம் உள்ளவர். அவர் கொடுத்த ஆலோசனையால் தான், சோனாக் ஷிக்கும், உடற்பயிற்சி மீது ஆசை வந்ததாம்.

Sharing is caring!