மாமனிதன்

விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை’ படத்திற்கு பிறகு உதயநிதியை வைத்து கண்ணே கலைமானே என்ற படத்தை இயக்கினார் இயக்குனர் சீனுராமசாமி. அந்தப்படம் முடிவடைந்த நிலையில் பல மாதங்களாக கிடப்பில் கிடக்கிறது.

இந்நிலையில் மீண்டும் விஜய் சேதுபதியுடன் 4வது முறையாக இணைந்துள்ளார் சீனு ராமசாமி. ‘மாமனிதன்’ என்று பெயரிடப்பட்ட அந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் மதுரை பக்கத்திலுள்ள ஆண்டிப்பட்டியில் துவங்கியது. கிராமத்துப் பின்னணியில் கதை நிகழும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஆட்டோ ஓட்டுனராக நடிக்கிறார்.

‘ஜோக்கர்’ குரு சோமசுந்தரமும், நடிகை காயத்ரியும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். விஜய் சேதுபதியின் நண்பராக நடிக்கிறார். விஜய்சேதுபதி ஹிந்து மதத்தை சேர்ந்தவராக நடிக்க, குரு சோமசுந்தரம் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவராக நடிக்கிறாராம். இஸ்லாமிய இளைஞராக நடிக்கும் குரு சோமசுந்தரத்துக்கும், விஜய் சேதுபதிக்கும் இடையிலான எமோஷனல் டிராமா தான் மாமனிதன் படத்தின் கதையாம்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘ஜிகர்தண்டா’ படத்தில் குருசோமசுந்தரம் முக்கிய கேரக்டரில் நடித்திருப்பார். இந்த படத்தில் விஜய்சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். ஆனாலும் ‘மாமனிதன்’ படம்தான் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம்.

இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசை அமைக்கும் மாமனிதன் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 40 நாட்கள் ஆண்டிப்பட்டியிலும், அதனை தொடர்ந்து கேரளா, காசி, ராமேஸ்வரத்திலும் நடக்க இருக்கிறதாம்.

Sharing is caring!