மாரி செல்வராஜ், தனுஷை வைத்து அடுத்தப்படத்தை இயக்குகிறார்

பா.ரஞ்சித்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், கதிர், ஆனந்தி, யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, சில மாதங்களுக்கு முன்னர் வெளியான படம் பரியேறும் பெருமாள். இந்தபடம் நல்ல விமர்சனங்களையும், ரசிகர்களின் ஆதரவையும் பெற்றது.

இந்த நிலையில், மாரி செல்வராஜ், தனுஷை வைத்து அடுத்தப்படத்தை இயக்குகிறார். பரியேறும் பெருமாளைப்போன்று இந்தப்படமும், சமூக சார்ந்த கதையில் உருவாகிறது. தாணுவின் வி கிரியேசன்ஸ் தயாரிக்கிறது.

பரியெறும் பெருமாள் படத்தைப் பார்த்தேன். யதார்த்தத்துக்கு நெருக்கமாக இருந்தது. படக்குழுவுக்கு வாழ்த்துகள். அடுத்தப்படியாக மாரிசெல்வராஜ் இயக்கும் புதிய படத்தில் நான் நடிக்கிறேன். தாணு தயாரிக்கிறார் என பதிவிட்டிருக்கிறார்.

Sharing is caring!