மாரி படத்தின் இரண்டாம் பாகம் தனுசுடன் சாய்பல்லவி, டொவினோ தாமஸ், வித்யா பிரதீப், வரலட்சுமி

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் 3 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த மாரி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. இதில் தனுசுடன் சாய்பல்லவி, டொவினோ தாமஸ், வித்யா பிரதீப், வரலட்சுமி உள்பட பலர் நடிக்கிறார்கள், யுவன் இசை அமைக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். தனுஷின் வுண்ட்ர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. படம் பற்றிய லேட்டஸ்ட் அப்டேட்

மாரி 2-வில் பாடகர் விஜய் யேசுதாஸ் வில்லனாக நடித்திருந்தார். இதில் அவருக்கு பதிலாக மலையாள நடிகர் டொவினோ தாமஸ் வில்லனாக நடிக்கிறார். கூடுதலாக வரலட்சுமி வில்லியாக நடிக்கிறார். முதல் பாகத்தில் தனுசுடன் இடது வலதாக இருந்த ரோபோ சங்கர் உள்ளிட்ட காமெடி டீம் அப்படியே தொடர்கிறது.

முதல் பாகத்தில் தனுஷ் காஜல் அகர்வாலின் காதலை ஏற்காமல் “என்னோட தாதா தொழிலுக்கு இதெல்லாம் சரிப்பட்டு வராது” என்று விலகி விடுவார். அதனால் இந்த பாகத்தில் காஜலின் கேரக்டர் இல்லை. அவருக்கு பதிலாக சாய்பல்லவி நடிக்கிறார். தனுஷூடன் மோதி அவரை வம்படியாக காதலிக்கும் அராத்து ஆனந்தியாக நடிக்கிறார். அவர் வடசென்னையில் ஆட்டோ ஓட்டும் பெண். இதுவரை சாந்தமான கேரக்டர்களில் நடித்து வந்த சாய் பல்லவி இதில் அடித்து ஆடுகிறார். சாய் பல்லவியின் நடன காட்சிகளை பிரவுதேவா அமைத்திருக்கிறார்.

ஹீரோவாக நடித்து வரும் கிருஷ்ணா, இதில் தனுஷின் நண்பனாக நடிக்கிறார். முதல் பாகத்துக்கு அனிருத் இசை அமைத்திருந்தார். தற்போது தனுசுக்கும், அனிருத்துக்கும் சின்ன மனத்தாங்கல் இருப்பதால், யுவன் இசை அமைத்திருக்கிறார். மாரி 3ம் பாகத்துக்கான முடிச்சோடு இந்தப் பாகம் நிறைவடையும். அடுத்த மாதம் டிசம்பர் 21-ம் தேதி படம் வெளிவருகிறது.

Sharing is caring!