மாரி-2வை டிசம்பர் மாதம் வெளியிட தீர்மானம்

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவிருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு சொல்லப்பட்டது.

தீபாவளியன்று விஜய் நடித்த சர்கார் திரைப்படம் வெளியாக இருக்கிறது என்பது தெரிந்த பிறகும் எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் உறுதியாக வெளியாகும் என்று அறிவித்தனர். ஆனால் எனை நோக்கி பாயும் தோட்டா தீபாவளியன்று வெளியாகவில்லை.

இதற்கு என்ன காரணம் என்று படத்துறையில் விசாரித்தபோது… எனை நோக்கி பாயும் தோட்டா படமே இன்னும் முடியவில்லை என்று சொல்கிறார்கள். அதாவது, படப்பிடிப்பு முடிந்துள்ளதே தவிர போஸ்ட் புரடக்ஷன் இன்னும் முடிவடையவில்லை. இன்னமும் டப்பிங், எடிட்டிங் போன்ற பணிகள் பாக்கி இருக்கின்றனவாம்.

அதனால் இப்படம் இப்போதைக்கு வெளிவர வாய்ப்பில்லை. எனவே, தனுஷ் தயாரித்துள்ள மாரி-2வை டிசம்பர் மாதம் வெளியிட தீர்மானித்து அதன் அடிப்படையில் புரமோஷனை துவக்கியுள்ளார். முதற்கட்டமாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் டிசம்பர் மாதம் மாரி 2 ரிலீஸாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை அறிந்த தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தன்னுடைய எனை நோக்கி பாயும் தோட்டா படம் வெளியான பிறகு மாரி 2 படத்தை வெளியிடும்படி கேட்டுக் கொண்டாராம். முதலில் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை தயார் செய்து விட்டு சொல்லுங்கள், உங்கள் படம் தயாராக இருந்தால் என் படத்தை தள்ளி வைத்து கொள்கிறேன் என்று உறுதி அளித்திருக்கிறாராம் தனுஷ்.

Sharing is caring!