மாரி – 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

சென்னை:
மாரி – 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தனுஷின் நடிப்பில் வெளியாகி செம ஹிட் அடித்துள்ள படம் வடசென்னை. இப்படத்திற்கு அடுத்ததாக தனுஷின் நடிப்பில் என்னை நோக்கி பாயும் தோட்டா, மாரி-2 என வரிசையாக படங்கள் வர உள்ளன.

இந்நிலையில் மாரி-2 படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை போன்றே பாலாஜி மோகன் இயக்கும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

படம் அடுத்த மாதம் வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது. இந்த பர்ஸ்ட் லுக் செம வைரலாகி வருகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!