மாரி 2 படத்தில் இலுமினாட்டி? வில்லன் கையில் உள்ள டாட்டூ

சென்னை:
மாரி 2 படத்தில் வில்லன் கையில் இலுமினாட்டி பற்றிய டாட்டூ உள்ளது. இதனால் படத்தில் இலுமினாட்டி பற்றி இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மாரி தனுஷ் நடிப்பில் பாலாஜிமோகன் இயக்கத்தில் வெளிவந்த படம். இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இணையத்தையே அதிர வைத்து வருகின்றது. இதில் மலையாள நடிகர் டொவினோ தாமஸ் வில்லனாக நடித்துள்ளார்.

இவர் கையில் இலுமினாட்டி குறிகளை டாட்டூவாக போட்டுள்ளார், இதை வைத்து இப்படத்தில் இலுமினாட்டி பற்றியும் இருக்குமா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!