மாரி 2 படத்தை இணையத்தில் வெளியிட கோர்ட் தடை

சென்னை:
மாரி 2 படத்தை இணையத்தில் வெளியிட கோர்ட் தடை விதித்துள்ளது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் மாரி 2 படம் ரிலீசாகி உள்ளது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துள்ளது.

போன பாகத்திற்கு அனிருத் இசைமைத்திருக்க இப்படத்தில் அவரின் பாடல் சின்ன பிட் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாம். அவருக்கு பதிலாக யுவன் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தை இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கும்படி தனுசின் வுண்டர்பார் பட நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர் மாரி-2 படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.

இதனால் 16,135 இணையதளங்களில் இந்த படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!