‘மாரி 2’ ‘ரவுடி பேபி’ பாடல் சூப்பர் ஹிட்டானது

பாலாஜி மோகன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி மற்றும் பலர் நடித்த ‘மாரி 2’ படம் கடந்த வருடம் டிசம்பர் 21ம் தேதி வெளிவந்தது. அந்தப் படத்தில் இடம் பெற்ற ‘ரவுடி பேபி’ பாடல் பட வெளியீட்டிற்கு முன்பே சூப்பர் ஹிட்டானது.

அந்தப் பாடலின் லிரிக் வீடியோவிற்கு அமோகமான வரவேற்பு கிடைத்து, அந்தப்பாடல் யு-டியூபில் குறுகிய நாட்களில் 5 கோடி பார்வைகளைக் கடந்தது. நேற்று முன்தினம் மாலை அந்தப் பாடலின் முழு வீடியோ யு டியூபில் வெளியானது. அந்தப் பாடல் குறைந்த மணி நேரங்களில் 50 லட்சத்தைக் கடந்து தற்போது 1 கோடி பார்வைகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.

37 மணி நேரங்களில் 1 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது. அத்துடன் பாடலுக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. ‘ரௌடி பேபி’ பாடலின் லிரிக் வீடியோ 35 நாட்களில் 5 கோடி பார்வைகள், முழு பாடல் வீடியோ, 24 மணி நேரத்தில் 2,88,000 லைக்குகள், 24 மணி நேரத்தில் 70 லட்சம் பார்வைகள், மியூசிக்கலி ஆப்பில் 3,50,000 வீடியோக்கள் என புதிய சாதனையைப் படைத்துள்ளது. தமிழ் சினிமா பாடல்களில் இவையனைத்தும் புதிய சாதனை.

Sharing is caring!