மாஸ் படமாக இருக்கும்… அஜித் படம் பற்றி பேசிய இயக்குனர் சிவா

சென்னை:
மாஸ் படமாக இருக்கும்… இருக்கும்… என்று முதல்முறையாக வாய் திறந்துள்ளார் இயக்குனர் சிவா.

சிவா தொடர்ந்து அஜித்துடன் 3 படங்களை முடித்து விட்டார். 4வது படமாக விசுவாசம் படத்தில் மீண்டும் இணைந்துள்ளார். இதில் பல வருடங்களாக பணியாற்றி வருகின்றார். இதில் விவேகம் படம் ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லை.

இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இதற்காக விமான நிலையத்திற்கு வந்த சிவாவிடம், ரசிகர் ஒருவர் ‘சார் சமூக வலைத்தளங்களில் வரும் நெகட்டிவ் விமர்சனங்களை கண்டுக்கொள்ளாதீர்கள்’ என்று கூறியுள்ளார்.

அதற்கு சிவா ‘கவலையே வேண்டாம், இந்த முறை, இது உங்களுக்கான மாஸ் படமாக இருக்கும்’ என சிவா தெரிவித்தாராம்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!