மின்னல் முரளியாக டொவினோ தாமஸ்

மலையாள சினிமாவின் விஜய் சேதுபதியாகவே மாறி வருகிறார் இளம் நடிகர் டொவினோ தாமஸ். சமீபத்தில் வெளியான தனுஷின் மாரி 2 படத்தில் வித்தியாசமான வில்லனாக நடித்திருந்த இவர், மலையாளத்தின் தற்போது முன்னணி ஹீரோவாக மாறியுள்ளார். அதுமட்டுமல்ல, ஒரு குறிப்பிட்ட பாதையில் மட்டுமே பயணிக்க விரும்பாமல் அனைத்து தரப்பு கதைகளிலும் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்.

அடுத்ததாக மின்னல் முரளி என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் டொவினோ. இந்த படம் ஒரு லோக்கல் சூப்பர்மேன் பற்றிய படமாக உருவாகிறது. ஏற்கனவே டொவினோவை வைத்து ‘கோதா’ என்கிற படத்தை இயக்கிய பஷில் ஜோசப், இந்த படத்தையும் இயக்குகிறார். சூப்பர் ஹீரோ படம் என்பதால் தற்போது இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

Sharing is caring!