மிஸ்டர் பீன் இறந்துவிட்டார்… வதந்தி பரப்பி வைரஸ் அனுப்பிய கும்பல்!

நியூயார்க்:
இறந்து விட்டார்… மிஸ்டர். பீன் இறந்து விட்டார் என்று வதந்தி பரப்பில் அதனுடன் வைரஸ் வைத்து அனுப்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலகம் முழுவதும் பிரபலமானவர் மிஸ்டர்.பீன். இவரின் உண்மையான பெயர் ரோவன் அட்கின்சன். இவர் திடீரென இறந்துவிட்டார் என செய்தி பரவியது. பின்னர் இது வதந்தி என்று தெரிய வந்தது.

இந்த வதந்தி எதற்காக பரப்பப்பட்டது என்பதுதான் பெரும் அதிர்ச்சி. ஒரு போலியான இணையதளம் இவர் இறந்துவிட்டதாக பதிவிட்டு அதன் மூலம் சில ஆபத்தான கம்ப்யூட்டர் வைரஸ்களை பரப்பி விட்டுள்ளனர். இதன் மூலமாக லட்சக்கணக்கான கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

தற்போது 63 வயதாகும் ரோவன் அட்கின்சன் இறந்துவிட்டார் என செய்தி பரவுவது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!