மீண்டும் அமுதவாணன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அது இது எது நிகழ்ச்சியில் சுமார் 300 எபிசோடுகளில் நடித்தவர் அமுதவாணன். அதன்பிறகு சினிமாவில் இருந்து வாய்ப்புகள் வந்ததால் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார். தற்போது மீண்டும் அது இது எது நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

இதுகுறித்து அமுதவாணன் கூறுகையில், எனக்கு நல்லதொரு அடையாளத்தை கொடுத்ததே அது இது எது நிகழ்ச்சிதான். அதன்மூலம் தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானேன். ஒவ்வொரு எபிசோடிலும் ஒவ்வொருவிதமான கெட்டப்பில் தோன்றி திறமையை வெளிப்படுத்தி வந்தேன்.

அப்படி கிடைத்த புகழ் காரணமாக பாலாவின் தாரைத்தப்பட்டை படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதையடுத்து தொடர்ந்து சில படங்கள் கிடைத்ததால் நிகழ்ச்சியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. சமீபத்தில் வெளியான பில்லா பாண்டி படத்திற்கு பிறகு கடம்பன் பார்வை உள்பட சில படங்களில் நடிக்கிறேன்.

Sharing is caring!