மீண்டும் அமெரிக்கா பறந்தார் துருவ்

விக்ரமின் மகன் துருவ் விக்ரம், அமெரிக்காவில் படித்து வருகிறார். படிப்பை முடித்த பிறகு தான் சினிமாவில் என்ட்ரி கொடுக்க வேண்டும் என்பது தான் அவர்களது திட்டமாக இருந்தது. ஆனால் துருவ் விக்ரம், இணையதளத்தில் வெளியிட்டிருந்த டப்மாஷைப் பார்த்து அவருக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது.

அதன்காரணமாக படித்து வரும்போதே பாலா இயக்கியுள்ள வர்மா படத்தில் நாயகனாக நடித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் மீண்டும் அமெரிக்காவிற்கு சென்றிருந்த அவர், சமீபத்தில் வர்மா படத்தின் டிரைலர் விழாவுக்காக சென்னை வந்திருந்தார். அதையடுத்து சில தினங்களில் மீண்டும் அமெரிக்கா சென்று படிப்பை தொடர்ந்து வருகிறார்.

படிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய பிறகு தான் அவரது இரண்டாவது படம் குறித்து அறிவிப்பு வெளியாகுமாம்.

Sharing is caring!