மீண்டும் இணைகிறதா தனுஷ் – அனிருத் கூட்டணி

சென்னை:
ஒய் திஸ் கொலை வெறி படத்தின் மூலம் இணைந்த தனுஷ் – அனிருத் ஜோடி இடையில் பிரிந்து இருந்தது. தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் உள்ள பல கூட்டணிகளில் பிரபலமானது டிஎன்எ எனப்படும் தனுஷ்- அனிருத் கூட்டணி. 3 என்ற படத்தில் இணைந்த இந்த கூட்டணி, அப்படத்தின் ஒய் திஸ் கொலை வெறி என்ற பாடலின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானது.

அதன் பிறகு பல படங்களில் இணைந்தாலும் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் பிரிந்து தான் பணியாற்றி வந்தனர். ஆனால் இவர்கள் பேட்டயின் ஒரு பாடலின் மூலம் மீண்டும் இணைந்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்த இப்பாடலுக்கு தனுஷ் வரிகளை எழுதியிருந்தார்.

இந்நிலையில் இந்த கூட்டணி அடுத்த ஆண்டு 2019ல் புதியதொரு படத்தில் மீண்டும் இணையவுள்ளனர் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாம்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!