மீண்டும் என்ஜிகே படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சூர்யா

தானா சேர்ந்த கூட்டம் படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படத்தில் நடித்தார் சூர்யா. ஆனால் அந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமாகிக் கொண்டே வந்தது. இதனால் கே.வி.ஆனந்த் இயக்கும், தனது 37வது படத்தில் நடிக்கத் தொடங்கினார் சூர்யா.

இதன்காரணமாக என்ஜிகே படப்பிடிப்பு மேலும் தாமதமாகிக் கொண்டே வந்தது. இந்நிலையில், தற்போது கே.வி.ஆனந்த் படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூரில் நடைபெற்று வரும் நிலையில், நவம்பர் மாதம் இறுதியில் மீண்டும் என்ஜிகே படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் சூர்யா. 15 நாட்கள் சென்னையில் நடைபெறும் இந்த படப்பிடிப்போடு என்ஜிகே படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்கிறார்கள்.

Sharing is caring!