மீண்டும் காதலில்….

தமிழ் சினிமாவில் 15 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்பவர் த்ரிஷா. ஏற்கனவே நடிகர் ராணாவுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். தயாரிப்பாளர் வருண் மணியனை காதலித்தார். இருவருக்கும் நிச்சயதார்த்த நடந்த நிலையில் திருமணம் நின்று போனது.

பின்னர் சினிமாவில் தீவிரம் காட்டிய த்ரிஷா, தற்போது அரை டஜன் படங்கள் கைவசம் வைத்துள்ளார். ஒவ்வொரு படமும் அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளன.

இந்நிலையில், கனடாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள த்ரிஷா, டுவிட்டரில், “A table for two ❤ ❤ ” என பதிவிட்டிருக்கிறார்.

இதைப்பார்த்த பலரும் த்ரிஷா, காதல் வலையில் சிக்கியிருப்பதாக பதிவிட்டு வருகின்றனர். இதன் உண்மை விளக்கத்தை த்ரிஷா தான் கூற வேண்டும்.

Sharing is caring!