மீண்டும் கொந்தளிக்கும் விக்னேஸ் சிவன்

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்திற்கு விக்னேஷ்சிவன் தனது ஆதங்கத்தை வெளியிப்படுத்தியுள்ளார்.

கோவையில் வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமி ஒருவர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸார் 10 தனிப்படைகளை அமைத்து குற்றவாளியை தேடி வருகின்றனர். இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காதலி நயன்தாராவை ஆபாசமாக பேசிய ராதாரவி மீது ஏகப்பட்ட கோபத்தில் இருக்கும் விக்னேஷ் சிவன் கோவை சம்பவம் குறித்து தனது டிவிட்டரில் நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்!

இந்த மாதிரி செய்பவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும். அன்றாடம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. டிவிட்டரில் போஸ்ட் போடுவதை தாண்டி எதாவது செய்யவேண்டும் என ஆவேசமாக பேசியுள்ளார்.

நெஞ்சு பொறுக்குதில்லையே -இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்!

Punishments&justice should be givn to issues like this swiftly to restore hope in livelihood! Evryday somethin Terrible is being witnessed against women!

Instd of jus tweeting,something more useful shd be done

Sharing is caring!