மீண்டும் சிம்ரனுடன் இணைந்து நடிக்கும் த்ரிஷா

சென்னை:
மீண்டும் சிம்ரனுடன் இணைந்து நடிக்கிறார் த்ரிஷா என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இரு முன்னணி நடிகைகள் ஒரே படத்தில் இணைந்து நடிப்பது சாதாரண விஷயம் தான். ஆனால் அந்த இருவரே 3 முறை இணைந்தால் அது ஷாக்கிங் தகவல் தான்.

பிரசாந்த் நடிப்பில் 1999ல் வெளியான ஜோடி படத்தில் ஹீரோயினாக சிம்ரன் நடித்திருப்பார். அவருக்கு தோழியாக த்ரிஷா நடித்திருப்பார்.

இந்த இருவர் மீண்டும் ரஜினியின் பேட்ட படத்தில் இணைந்தனர். தற்போது 3வது முறையாக ஆக்‌ஷன் கதைக்களத்தை கொண்ட படம் ஒன்றில் இணைய உள்ளனர். இப்படத்தை சனந்த் இயக்குகிறார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!