மீண்டும் சிம்ரன்

பொங்கலுக்கு வெளியாகி தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் சிம்ரன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து சிம்ரனுக்கு நிறைய பட வாய்ப்புகள் தேடி வர வாய்ப்புள்ளது. இந்நிலையில் மாதவனுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் சிமரன்.

ஏற்கெனவே பாலச்சந்தர் இயக்கத்தில் ‘பார்த்தாலே பரவசம்’, மணிரத்னம் இயக்கத்தில் கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களில் மாதவனும், சிம்ரனும் இணைந்து நடித்திருந்தார்கள்.

இஸ்ரோ (ISRO) வில் விஞானியாக இருந்த நம்பி நாராயாணன் நம் நாட்டு தொழில்நுட்பத்தை அந்நிய நாடுகளுக்கு விற்றுவிட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார். அதன் பிறகு இவர் குற்றவாளி எல்லை என்று நீதிமன்றம் தீரப்பளித்தது.

‘ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட்ஸ்’ என்ற பெயரில் இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. மாதவன் இந்த படத்தில் நம்பி நாராயணனாக நடிப்பதோடு, ஆனந்த் மகாதேவனுடன் இணைந்து இந்த படத்தை இயக்குகிறார்.

தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எடுக்கப்படும் இந்த படத்தில்தான் மாதவனுடன் சிம்ரன் நடிக்க இருக்கிறார். மாதவனுக்கு ஜோடியாக நடித்தாலும் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளில் ஓல்டுகெட்டப்தானாம். இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க மும்பையிலேயே நடக்க இருக்கிறது.

Sharing is caring!