மீண்டும் படப்பிடிப்பு விரைவில் ஸ்டார்ட்… இம்சை அரசன் பார்ட் 2 விரைவில் ஸ்டார்ட்

சென்னை:
மீண்டும்… மீண்டும் தொடங்க உள்ளது இம்சை அரசன் படத்தின் படப்பிடிப்பு என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

வடிவேலு இந்திய சினிமாவின் காமெடி நடிகர்களில் ஈடு இணையில்லாதவர். இவரை எப்போது திரையில் பார்ப்போம் என ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

அந்த வகையில் 23-ம் புலிகேசி இரண்டாம் பாகம் சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டு, பின் தயாரிப்பாளர் ஷங்கருடன் வடிவேலு சில பிரச்சனை செய்ய, அப்படப்பிடிப்பு நின்றது.

இதனால் வடிவேலுவிற்கு ரெட் கார்டு போடும் அளவிற்கு ஆகிவிட்டது, இனி வடிவேலுவை திரையிலேயே பார்க்க முடியாத நிலை இருந்து வந்தது. தற்போது அதற்கு ஒரு விடை கிடைத்துவிட்டது, ஷங்கரும்-வடிவேலுவும் பேசி சமாதானம் ஆகிவிட்டார்களாம்.

இதனால், மீண்டும் 23-ம் புலிகேசி இரண்டாம் பாகம் தொடங்கப்படும் என்று தகவல்கள் பரபரக்கிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!