மீண்டும் போலீஸ் யூனிபார்ம் போடும் அருண் விஜய்… இப்போ செம திரில்லர் படம்!!!

சென்னை:
மீண்டும் காக்கிச்சட்டை போட்டு நடிக்க உள்ளார் நடிகர் அருண் விஜய் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

குற்றம் 23 படத்தை தொடர்ந்து அறிமுக இயக்குநர் கோபிநா நாராயணமூர்த்தி இயக்கும் புதிய த்ரில்லர் படத்தில் நடிக்க அருண் விஜய் ஒப்பந்தமாகி இருக்கிறார் அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான தடம் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அவர் தற்போது அக்னிச் சிறகுகள், சாஹோ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். பாக்ஸர் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில், இயக்குநர்கள் கண்ணன் மற்றும் மிலனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்கும் புதிய படத்தில் நடிக்க அருண் விஜய் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

குற்றம் 23 படத்திற்கு பிறகு இந்த படத்தில் அருண் விஜய் போலீஸாக நடிக்கிறார். இதுபற்றி அருண் விஜய் கூறும்போது, குற்றம் 23 படம் மருத்துவத்துறையில் நடக்கும் ஊழலை மையமாக கொண்ட திரில்லர் படம். இந்த படம் நகரத்தில் தொடர்ச்சியாக நடக்கும் மர்மமான கொலைகளை பற்றியும், அவற்றின் பின்னணியில் உள்ள மர்மத்தை பற்றிய கதை இது.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை இறுதி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மார்ச் மாத இறுதிக்குள் படப்பிடிப்பு தொடங்க முடிவு செய்துள்ளோம்” என்றார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!