மீண்டும் மோதல்… அஜித் ரசிகர்கள், நடிகை கஸ்தூரி வார்த்தை மோதல்

சென்னை:
மீண்டும்… மீண்டும்… அஜித் ரசிகர்களுடன் சமூக வலைதளத்தில் மோதி வருகிறார் நடிகை கஸ்தூரி.

அஜித் ரசிகர்களுக்கும் நடிகை கஸ்தூரிக்கும் சில நாட்களாக மோதல் நீடித்து வருகிறது. ‘தல’ வார்த்தையுடன் தன்பெயரை வைத்திருந்த ரசிகர் கஸ்தூரியின் பதிவுக்கு ஆபாசமான கருத்தை வெளியிட்டார்.

இதேபோல் அவரது இன்னொரு பதிவையும் அஜித் பெயரை சேர்த்து தனது பெயரில் வைத்திருந்த ஒருவர் கண்டித்தார். இதற்கு பதில் அளித்த கஸ்தூரி இது தெரிந்துதான் ரசிகர் மன்றத்தை எப்போதோ கலைத்து விட்டார் என்றார்.

தனிப்பட்ட ஒருவர் கருத்துக்காக அஜித் பெயரை இழுக்க வேண்டாம் என்று அவரது ரசிகர்கள் கஸ்தூரியை கடுமையாக கண்டித்தனர். இந்த மோதல் நீடித்த நிலையில் இன்னொரு ரசிகரும் கஸ்தூரி பற்றி அவதூறு கருத்தை பதிவிட்டுள்ளார்.

இதற்கு கஸ்தூரி, “மானம் ரோஷம் உள்ள அஜித் ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள். இந்த கூமுட்டையின் விவரம் தெரிந்தவர்கள் என்னை அணுகவும்” என்று பதிவிட்டுள்ளார். இவர்கள் மோதல் சமூக வலைத்தளத்தில் பரபரப்பாக உள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!