மீண்டும் ஷாம்

12 பி படத்தில் ஹீரோவாக அறிமுகமான ஷாம், அதன்பின்னர் பல படங்களில் நடித்தார். தற்போது காவியன் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இதுதவிர வெங்கட்பிரபுவின் பார்ட்டி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

இதுப்பற்றி ஷாம் கூறும்போது, “அம்மா கிரியேஷன்ஸ் சிவா, எனது அண்ணன் போன்றவர். என்னுடைய திரையுலக பயணத்தில் மிகுந்த அக்கறை காட்டுபவர். ‘பார்ட்டி’ படத்தில் நடிக்குமாறு கேட்டார். வெங்கட்பிரபு இளைஞர்களை ஈர்க்கும் படம் பண்ணக்கூடியவர் என்பதால் நடித்தேன்.

நட்புக்கு மரியாதை கொடுக்குற அற்புதமான டீம், கிக் படத்தில் கிடைத்த நல்ல பெயர் இதிலும் கிடைக்கும்னு நம்புறேன். இன்னொரு பக்கம் கதாநாயகனாக நடித்துவரும் ‘காவியன்’ படம், முழு வீச்சில் தயாராகி வருகிறது. இது தவிர நல்ல படங்களையும் எனது தயாரிப்பில் உருவாக்கும் பொருட்டு, இரண்டு கதைகளைத் தேர்வு செய்துள்ளேன். வெளி தயாரிப்பிலும் ஒரு படத்தில் நடிக்கிறேன். இதுப்பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

எத்தனை படங்கள் நடித்தோம் என்பதைவிட, ரசிகர்கள் மனதில் எவ்வளவு காலம் மனதில் நின்றோம் என்பதில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். 2019ல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் என்னை பார்க்கலாம் என்றார்.

Sharing is caring!