மீண்டு வந்த ஸ்ரத்தா கபூர்

பிரபாஸ் நடித்து வரும் சாஹோ படத்தில் நாயகியாக நடித்திருப்பவர் ஸ்ரத்தா கபூர். பாலிவுட் நடிகையான இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அப்போது அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, மருத்துவமனையில் தங்கியிருந்து தீவிர சிகிச்சை எடுத்து வந்த ஸ்ரத்தா கபூர், பின்னர் வீடு திரும்பிய பிறகும் இரண்டு வாரங்கள் ஓய்வில் இருந்தார். தற்போது அவருக்கு டெங்கு காய்ச்சல் பூரணமாக குணமடைந்து விட்டதை அடுத்து மறுபடியும் ஹிந்தி படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் ஸ்ரத்தா.

Sharing is caring!