மீ டூவின் அந்த நிமிடம்

கடந்த 2018ம் ஆண்டில் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு விஷயம் மீ டூ. பாடலாசிரியர் வைரமுத்து முதல் நடிகர் அர்ஜுன் வரை பலர் மீ டூ வில் சிக்கினார்கள். தற்போது இந்த பிரச்சினையை மையமாக வைத்து அந்த நிமிடம் என்ற படம் தயாராகிறது. கே.பாலச்சந்தர், எஸ்.பி.முத்துராமனிடம் உதவியாளராக இருந்த குழந்தை ஏசு இயக்குகிறார். மஞ்சுளா தயாரிக்கிறார்.

ருத்ரா, நாசிங்கான், சஞ்சனா, சிங்கள நடிகர் வால்வீரசிங், சன்னா பெராரோ உள்பட பலர் நடிக்கிறர்கள். மாட்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார், அருணகிரி இசை அமைக்கிறார். வெளிநாட்டு வேலைக்கு செல்லும் ஹீரோ, அங்கு மீ டூ பிரச்சினையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்கிற கதை. படப்பிடிப்புகள் நேற்று சென்னையில் தொடங்கியது தொடர்ந்து மலேசியா, இலங்கையில் படப்பிடிப்பு நடக்கிறது.

Sharing is caring!